கோவை மாவட்ட சுகாதாரம் மற்றும் குடும்பநலப்பணிகள் அலுவலகத்தில் உலக நவீன வாசக்டமி இரு வார விழாவினை (ஆண் களுக்கான குடும்பநல கருத்தடை – நவீன வாசக்டமி இரு வார விழா) முன்னிட்டு விழிப்புணர்வு ரதத்தை (நவ.22) ஆட்சியர் டாக்டர் ஜி.எஸ்.சமீரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார்.
நவீன வாசக்டமி இருவார விழா
நிகழ்ச்சியில் கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.நிர்மலா, துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மரு.அருணா, குடும்பநல துணை இயக் குநர் மரு.கௌரி, நகர் நல அலுவலர் பிரதீப் மற்றும் வட்டார சுகாதாரப்பணி யாளர்கள் கலந்து கொண் டனர். ஒவ்வொரு ஆண்டும் குடும்ப நலத்துறையின் சார்பில் நவம்பர் 21-ம் தேதி முதல் டிசம்பர் 4-ம் தேதி வரை உலக நவீன வாசக்டமி இருவார விழா அனுசரிக்கப்படுகிறது.
அதன்அடிப்படையில் இந்த ஆண்டு உலக நவீன வாசக்டமி இருவார விழாவினை முன்னிட்டு வாசக்டமி விழிப்புணர்வு ரதம் தொடங்கி வைக்கப் பட்டுள்ளது.
இந்த ரதம் மாவட்டத் தின் முக்கிய இடங்களான ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள், மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ஆகிய இடங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவுள்ளது.
ஆண்களுக்கான வாசக்டமி முகாம்கள் கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பொள்ளாச்சி அரசு தலைமை மருத்துவமனை ஆகியவற்றில் அனைத்து வேலைநாட்களிலும் டிசம்பர் 4-ம் தேதிவரை நடைபெறுகிறது. இம்மு காம்களில் கருத்தடை செய் துகொள்ளும் ஆண்களுக்கு ஊக்கத்தொகையாக ரூ.3100/- வழங்கப்படும்.