fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீகாந்த் கிடாம்பியை கூட்டாளராக அறிவித்த ஹண்ட்ரட் நிறுவனம்

ஸ்ரீகாந்த் கிடாம்பியை கூட்டாளராக அறிவித்த ஹண்ட்ரட் நிறுவனம்

ஹண்ட்ரட், ஒரு முன்னணி விளையாட்டு பிராண்ட் ஆகும். இந்நிறுவனம் பாட்மிண்டன் ஜாம்பவானும், பத்மஸ்ரீ விருது பெற்றவருமான ஸ்ரீகாந்த் கிடாம்பியுடன் தனது கூட்டாண்மையை பெருமையுடன் அறிவிக்கிறது.

இந்த கூட்டாண்மை மதிப்புமிக்க இந்தோனேஷியா மாஸ்டர்ஸ் 2025 இல் அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும்.

இது அடுத்த தலைமுறை பாட்மிண்டன் ஆர்வலர்களை ஊக்குவிப்பதற்கும் அதிகாரம் அளிப்பதற்கும் ஹண்ட்ரட்டின் உறுதிப்பாட்டை பிரதிபலிக்கிறது.

இந்த கூட்டாண்மை குறித்து ஸ்ரீகாந்த் கூறுகையில், “செயல்திறன் மற்றும் இலக்குகளை அடைவதற்கான எனது ஆர்வத்துடன் எதிரொலிக்கும் ஒரு பிராண்டான ஹண்ட்ரட் உடன் கூட்டாளராக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார்.

ஹண்ட்ரட் நிறுவனத்தின் சிங்கப்பூர் இயக்குநர் மானக் கபூர் கூறுகையில், “ஹண்ட்ரட் குடும்பத்திற்கு ஸ்ரீகாந்தை வரவேற்பது உலகளவில் பாட்மிண்டனில் வழக்கமான விஷயங்களை தாண்டி பயணிப்பதற்கான எங்கள் அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும்“ என்றார்.

ஹண்ட்ரட் நிறுவனத்தின் இந்தியா இயக்குனர் விஷால் ஜெயின் கூறுகையில், “கடந்த தசாப்தத்தில் இந்தியாவில் பாட்மிண் டன் மிகப்பெரிய வளர்ச்சி யைக் கண்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், ஸ்ரீகாந்த் கிடாம்பி உலக ளாவிய பாட்மிண்டன் நட்சத்திரங்களின் பிரத்யேக குழுவான “கிளப் ஹண்ட்ரட்” இல் இணைகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img