fbpx
Homeபிற செய்திகள்கிள்ளை பேரூராட்சியில் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு

கிள்ளை பேரூராட்சியில் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு

சிதம்பரம் அருகே கிள்ளை பேரூராட்சியில் இருளர் பழங்குடி மக்கள் வசிக்கும் பகுதியில் தமிழ்நாடு அரசு பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணாதுரை நேரில் ஆய்வு செய்து, அந்தப் பகுதி மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார்.

பொங்கல் திருநாளை முன்னிட்டு, பழங்குடியினர் நலத்துறை இயக்குநர் ச.அண்ணாதுரை கிள்ளை பகுதி யில் வசிக்கும் இருளர் பழங்குடி மக்களோடு கடந்த 15-ஆம் தேதி பொங்கல் பண்டிகையை கொண்டாடினார்.

கிள்ளை எம்ஜிஆர் நகரில் பழங்குடியினர் இயக்குநருக்கு பேரூராட்சி துணைத் தலைவர் வழக்குரைஞர் கிள்ளை ரவிந்திரன் தலைமையில் கோலாட்டம், கரகாட் டத்துடன் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

பிறகு,எம்ஜிஆர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி வளாகத்தில் எம்ஜிஆர் நகர், தளபதி நகர்,சிசில் நகர் பழங்குடி மக்களோடு பொங்கல் கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பேரூராட்சி மன்றத் தலைவர் மல்லிகா முத்துக்குமார் முன்னிலை வகித்தார். பள்ளித் தலைமையாசிரியர் குமரவேல் வரவேற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வழக்குரைஞர் கிள்ளை ரவீந்திரன், அரசு பழங்குடியினர் நலத் துறை இயக்குநரிடம் இருளர் மக்களின் தேவைகளான மீன் பிடி தொழிலுக்கு செல்லும் பாதை, மனைப்பட்டா,தொகுப்பு வீடுகள், மானியத்துடன் மீன் பிடி சாதனங்க ளுடன் படகுகள் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தார். நிகழ்ச்சியில் கிராமத் தலைவர் செஞ்சி, செல்லப்பன், கண்ணன், சுரேஷ் உள்ளிட்ட கிராம முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img