fbpx
Homeபிற செய்திகள்சென்னை காமிக் கான் 2025க்கான காஸ்ப்ளே பயிற்சி பட்டறை

சென்னை காமிக் கான் 2025க்கான காஸ்ப்ளே பயிற்சி பட்டறை

மாருதி சுஸுகி அரீனா மற்றும் க்ரஞ்சிரோல் மூலம் இயக்கப்படும் சென்னை காமிக் கான் 2025க்கு முன்னதாக நடைபெற்ற வருடாந்திர காஸ்ப்ளே பட்டறை
டி.நகரில் உள்ள வாட்சன்ஸ்-இல் நடைபெற்றது. இந்த நிகழ்வு, அனைத்து தரப்பு காஸ்ப்ளேயர்களையும், ஆர்வலர்களையும் ஒன்றிணைத்தது.

இந்நிகழ்ச்சியில் சென்னையைச் சேர்ந்த அனுபவமிக்க காஸ்ப்ளேயர் மற்றும் அனிமே ஆர்வலர் சூர்யா பானு, இந்திய காஸ்ப்ளே சாம்பியன் 2024 சவுரப் சிங் ராவத் மற்றும் டார்க்-தீம் கவசம் மற்றும் எஃப்எக்ஸ் காஸ்ப்ளே நிபுணர் அரவிந்த் மேனன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த அமர்வுக்கு வருகை தந்த ஆர்வமுள்ள காஸ்ப்ளேயர்களை இம்மூவரும் ஊக்கப்படுத்தினர். இந்த பயிற்சி பட்டறையின் போது, ஃபோம், துணி, பசை மற்றும் கத்தரிக்கோல் போன்ற எளிய பொருட்களைப் பயன்படுத்தி சிக்கலான ஆடைகளை எவ்வாறு உருவாக்குவது என்பதை பார்வையாளர்களுக்குக் செய்து காட்டினர்.

தொடர்ந்து, பிப்ரவரி 8 மற்றும் 9 தேதிகளில் நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறவுள்ள சென்னை காமிக் கான் திருவிழாவிற்கு தயாராகுங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

படிக்க வேண்டும்

spot_img