சுதந்திர தினத்தை கொண்டாடும் வகையில், ஆகஸ்ட் 15 அன்ற கோயம்புத்தூர் ஸ்கூல் ஆப் மியூசிக், கோயம்புத்தூர் நற்செய்தி குழுமம் இணைந்து ஹீல் அண்ட் பிளெஸ் அவர் லாண்ட் என்ற தலைப்பில் தேசபக்தி இசை நிகழ்ச்சியை ஒய்டபுள்யூசிஏ ஹாலில் நடத்தினர்.
பேராசிரியர் ஜே.எஸ்.கென்னடி சீனியர் ஏற்பாட்டில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியில் தேசபக்தி பாடல்கள் பாடப்பட்டன. பல்வேறு இசை நிகழ்வுகளும் இடம்பெற்றன.