நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியம், நல்லம்பள்ளி வழி நாகர்கூடல், இண்டூர், பாப்பா ரப்பட்டி செல்லும் சாலையில் விஜய் வித்யாலயா கல்லூரி முதல் குடிப்பட்டி வழியாக சேவன்கொட்டாய் வரையுள்ள மூன்றரை கி.மீ தொலைவிற்கு சாலையை அகலப்படுத்தி, கல்வெட்டு அமைத்து மேம்படுத்துதல் பணிக்கு நெடுஞ்சாலைத்துறையில் ரூ.3 கோடி மதிப்பீட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. சாலையை அகலப்படுத்தி, மேம்படுத்தும் பணிக்கான பூமிபூஜை மற்றும் அடிக்கல் நாட்டு விழாவில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வெங்கடேஷ்வரன் சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு பணியை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில், நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர்கள், சாலை ஆய்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை அலுவலர்கள், பாமக மாநில செயற்குழு உறுப்பினர் பெரியசாமி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கோவிந்தசாமி, முருகன், மாவட்ட துணை செயலாளர் த.காமராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் வெங்கடாசலம், ஜெய்குமார், பசுமைத்தாயக மாவட்ட துணை செயலாளர் தங்கதுரை உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர்பொதுமக்கள் பலர் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.