கோவையில் பிரசித்தி பெற்ற மருதமலை சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பல்வேறு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், பொதுமக்களிடம் ஆலோசனைகளைப் பெற்று அதற்கேற்ப மேம்பாட்டுப் பணிகள் தொடர கோயில் நிர்வாகம் முடிவு செய்தது.
இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் ஆலோசனைகளை வழங்கும் விதமாக திருக்கோயில் வளாகத்தில், டிஜிட்டல் ஆலோசனைப் பெட்டியைத் திருக்கோயில் வளாகத்தில் வைக்க முடிவு செய்யப்பட்டது.அந்த வகையில் தொடுதிரை அம்சத்துடன் கூடிய டிஜிட்டல் ஆலோசனைப் பெட்டியை நேற்று அறங்காவலர் குழு தலைவர் ஜெயகுமார், துணை ஆணையர் செந்தில்குமார், அறங்காவலர்கள் மகேஷ்குமார், பிரேம்குமார், கனகராஜன், சுகன்யா ராசரத்தினம் ஆகியோர் நிறுவி, மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.