fbpx
Homeபிற செய்திகள்பாரா தடகள போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி வீரர்கள்

பாரா தடகள போட்டிகளில் பதக்கங்கள் வென்ற தூத்துக்குடி வீரர்கள்

தேசிய அளவிலான பாரா தடகள விளையாட் டுப் போட்டிக ளில் தூத்துக்குடியைச் சேர்ந்த மாற் றுத்திறனாளி வீரர்கள் 1 தங்கம் மற்றும் 4 வெண்கல பதக்கங்களை வென்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

இதில் ஜி-38 பிரிவில் முகமது நசீர் 100 மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும், தி-55 பொன் மோனிஷா வட்ட எறிதலில் மூன்றாம் மற்றும் ஈட்டி எறிதலில் இரண்டாம் இடமும், ஜி-40 பிரிவில் பேபி ஷாலினி ஈட்டி எரிதலில் மூன்றாவது இடமும், ஜி-20 பிரிவில் ஜாய் ஜெரிக்கா குண்டு எறிதலில் மூன்றாவது இடமும் பிடித்துள்ளனர்.

சாதனை படைத்த வீரர்கள் இன்று மேயர் ஜெகன் பெரியசாமியை சந்தித்து வாழ்த்து பெற்ற னர்.
திமுக பொதுக்குழு உறுப்பினர் கோட்டு ராஜா, மாநகர துணை செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான கீதா முருகேசன், மண்டல தலைவர் அன்னலட்சுமி, மாமன்ற உறுப்பினர்கள் ரெங்கசாமி அந்தோணி மார்சிலின் ரெக்ஸ்லின் தனலட்சுமி, நாகேஸ்வரி மற்றும் பாரா ஒலிம்பிக் பயிற்சியாளர் ஸ்டீபன் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img