fbpx
Homeபிற செய்திகள்கோவை பீளமேட்டில் உள்ள கோபால் நாயுடு பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

கோவை பீளமேட்டில் உள்ள கோபால் நாயுடு பள்ளியின் 50வது ஆண்டு பொன்விழா கொண்டாட்டம்

கோவை பீளமேட்டில் உள்ள ஸ்ரீ கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளியின் 50வது ஆண்டையொட்டி பொன்விழா கொண்டாட் டம் நேற்று தொடங்கியது. விழாவை பள்ளியின் தாளாளர் ரவிசாம் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

அதைத் தொடர்ந்து அவர் பொன்விழா ஆண்டு பள்ளிக் கொடியை அறிமுகம் செய்து பேசினார். பள்ளிப் பாடலை மாணவிகள் பாடினர். மாணவிகளின் பரதநாட்டியம் நடை பெற்றது. 50 ஆண்டு கால பள்ளியின் நினைவுகள் குறித்த வீடியோ திரையிடப்பட்டது.

விழாவில் ஓய்வு பெற்ற ஆசிரியர், முன்னாள் மாணவர்கள் கவுரவிக்கப் பட்டனர். விழாவில் ‘உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்’ என்ற தலைப்பில் பட்டிமன்ற பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசினார்.

அவர் பேசியதாவது: பள்ளி துவங்கி, 50 ஆண்டுகள் என்பது எண்ணிக்கை தான். ஆனால், இத்தனை ஆண்டுகளும் கரையற்ற சரித்திரம் படைத்துள்ளது தான் பெருமைக்குரியது. பள்ளியின் வளர்ச்சிக்கு அடுத்த மைல்கல்லாக இன்று படிக்கும் மாணவர் கள் இருக்க வேண்டும்.

வெளியே பேசுவது வெற்றியை மட்டுமே; வேத னைகளை அல்ல. எத்தனை முறை கீழே விழுந்தாலும், மேலே எழ கற்றுத் தருவது பள்ளிதான். மிக மகிழ்ச்சியான காலங்கள் பள்ளியில்தான் கிடைக்கும். மாணவர்கள் மகிழ்ச்சியை பார்த்து மனதார வாழ்த்துபவர்கள் பெற்றோரும், ஆசிரியர்களும்தான். மாணவர்கள் வளரும்போது ஆசிரியர்கள் மகிழ்வர்.

பொறாமை இல்லாத ஒரே இனம் ஆசிரியர்கள்தான்.
மாணவர்களாகிய நீங்கள் பல்வேறு துறைகளில் சாதனைகள் படைக்க வேண்டும். மீண் டும் பள்ளிக்க திரும்ப வந்து தற்போது பயிலும் மாணவர்களுக்கு உங்கள் விரல்களை கொடுத்து தூக்கி விட வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.

விழாவில் பள்ளியின் நிர்வாக அறங்காவலர் வித்ய பிரகாஷ், மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சவுந்தரராஜ், உதவி தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் மற்றும் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் ஸ்ரீகோபால் நாயுடு குழந்தைகள் பள்ளி தலைமை ஆசிரியை வித்யா நன்றி கூறினார்.

மாலையில் குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. இன்று (சனிக் கிழமை) மேஜிக் ஷோ, ஜார்க்கண்ட் மாநில கலை நிகழ்ச்சி, இசைக் கச்சேரி, புலியாட்டம், பொய்க்கால் குதிரை, கரகாட்டம், நாளை (ஞாயிற்றுக்கிழமை) கிராமிய திருவிழா, பாரம் பரிய உணவு விற்பனைக் கூடங்கள், மாட்டு வண்டி, குதிரை சவாரி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

படிக்க வேண்டும்

spot_img