கோவாவில் நடைபெற்ற சர்வதேச அளவிலான சிலம்பம் ஓபன் சாம்பியன்ஷிப் விளையாட்டுப் போட்டியில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரியில் இருந்து ஐந்து சிலம்ப வீராங்கனைகள் பங்கேற்றனர்.
அதில் ஒவ்வொருவரும் தலா இரு வெவ்வேறு போட்டிகளில் பங்கேற்று 9 தங்கப் பதக்கங்களை வென்று குவித்து, கல்லூரிக்கும் கோவைக்கும் பெருமை சேர்த்தனர்.
இதில், மூன்றாம் ஆண்டு ஆங்கிலத்துறை மோத்திகா சுருள் வால் மற்றும் இரட்டைக் கம்பு வீச்சிலும், நீனா ஸ்ரீ குத்துவரிசை மற்றும் வேல் கம்பு வீச்சிலும், கௌசிகா ஒற்றை கம்பு வீச்சிலும், நிதினா குத்து வரிசை மற்றும் வேல் கம்பு வீச்சிலும், தர்ஷினி மான் கொம்பு மற்றும் இரட்டை கம்பு வீச்சிலும் வெற்றி பெற்றனர்.
தொடர்ந்து, வீராங்கனைகளை கல்லூரி தலைவர் முனைவர் நந்தினி ரங்கசாமி,
கல்லூரி முதல்வர் முனைவர் ஆரத்தி மற்றும் உடற்கல்வி இயக்குனர் முனைவர் ஜெயசித்ரா ஆகியோர் பாராட்டினர்.