fbpx
Homeபிற செய்திகள்தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 78-வது சுதந்திர தினவிழா

தூத்துக்குடி ஸ்பிக் நகர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 78-வது சுதந்திர தினவிழா

ஸ்பிக்நகர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 78-வது சுதந்திர தினவிழா மிகச்சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. ஸ்பிக் நிறுவனத்தின் முழுநேர இயக்குநரும் எம்பள்ளித் தலைவருமான E.பாலு நம் தேசியக் கொடியை ஏற்றி வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு சிறப்புரையும் ஆற்றினார்.

பள்ளிச்செயலர் பிரேம் சுந்தர், உதவித் தலைமையாசிரியர் கலாவதி மற்றும் நிர்வாகக் குழுவினர் கலந்து கொண்டனர். மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் நடைபெற்றன.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களை நினைவூட்டும் விதமாக மாணவர்கள் தமிழ், ஆங்கிலத்தில் உரையாயாற்றி அசத்தினர். கவிதைகளையும் வாசித்தனர்.

சுதந்திரப்போராட்ட வீரப்பெண்மணி அஞ்சலையம்மாளை நினைவூட்டும் விதமாக அமைந்த நாடகம் ஒட்டு மொத்தப் பார்வையாளர்களையும் கவர்ந்தது.

படிக்க வேண்டும்

spot_img