ஜெம் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் பழனிவேலு மருத்துவத்துறையில் எட்டிய உயரம், பெற்ற விருதுகளை தாண்டி அவர் சந்தித்த கணக்கில்லா சவால்கள் பற்றிய சுயசரிதையை அவர் எழுதியுள்ளார்.
2006ல் டாக்டர் பழனிவேலுவிடம் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லியில் அவரை சந்தித்த போது கூறியதை தொடர்ந்து, தூண்டப்பட்டு ‘GUTS’ எனும் தலைப்பில் சுயசரிதையை எழுதியுள்ளார். இந்த புத்தக வெளியீட்டு விழா கடந்த 27ம் தேதி நடைபெற்றது.
டாடா குழுமத்தின் தலைவர் N.சந்திரசேகரன், கவுரவ விருந்தினர்கள் தமிழக வீட்டுவசதி துறை அமைச்சர் முத்துசாமி மற்றும் தமிழக பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இணைந்து ஜெம் மருத்துவமனை தலைவர் பழனிவேலு, முன்னாள் சிபிஐ இயக்குனர் டாக்டர்.கார்த்திகேயன், ஜெம் மருத்துவமனையின் தலைமை செயல் டாக்டர் P.பிரவீன் ராஜ் மற்றும் பல்வேறு விருந்தினர்கள் முன்னிலையில் வெளியிட்டனர்.