கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் தலங்களில் ஒன்றாக தேக்கம்பட்டி பவானி ஆற்ற ங்கரையில் அமைந்துள்ள வன பத்ரகாளியம்மன் கோவில் இருந்து வருகிறது. இந்த கோவிலில் இந்த ஆண்டின் ஆடிக்குண்டம் திருவிழா கடந்த 23ஆம் தேதி பூச்சாட்டுடன் துவங்கியது. அதனை தொடர்ந்து லட்சார்ச்சனை, கிராம சாந்தி,கொடியேற்றும் நிகழ்வு நடைபெற்றது.
தொடர்ந்து ஆடிக்குண்டம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான இன்று குண்டம் இறங்குதல் நிகழ்வு வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக இன்று அதிகாலை 3 மணிக்கு அம்மன் சிம்ம வாகனத்தில் கோவிலை வலம் வந்து பின்பு குண்டம் அமைக்கப்பட்ட பகுதிக்கு வந்தடைந்தது. பின்பு,சரியாக காலை 5:30 மணியளவில் குண்டம் இறங்குதல் நிகழ்ச்சி தொடங்கியது.
தலைமை பூசாரி ஹரி நடத்திய சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் குண்டத்தில் பூப் பந்து உருட்டப்பட்டு முதலில் தலைமை பூசாரி குண்டம் இறங்கினார். அதனை தொடர்ந்து மேட்டுப்பாளையம் எம்எல்ஏ ஏ.கே.செல்வராஜ், முன்னாள் மேயர் செ.ம.வேலுச்சாமி, போலீசார் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் குண்டம் இறங்கினர்.
தொடர்ந்து தேக்கம்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் வசிக்கும் திருநங்கைகள் கரகம் எடுத்து வந்தும், பால்குடம் எடுத்து வந்தும்,தீச்சட்டி எடுத்து வந்தும் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர்.
பக்தர்களின் பாதுகாப்புக் காக கோவை எஸ்பி பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் ஏடிஎஸ்பி சுரேஷ்குமார் தலைமையில் 600க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும், மேட்டுப்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசுந்தரம், பெரியநாயக்கன்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) சுரேஷ்குமார் தலைமையிலான நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் குண்டம் இறங்கும் பக்தர்களின் பாதுகாப்புக்காக பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டனர்.
மேலும், பக்தர்களின் வசதிக்காக கோவை, மேட்டுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்தும் 40க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.மேலும், பக்தர்களின் வருகைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகளும் இயக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தக்காரும், இணை ஆணையருமான மேனகா, இணை ஆணையர் ரமேஷ் செயல் அலுவலரும்,உதவி ஆணையர் கைலாச மூர்த்தி உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
இந்நிகழ்வில் திமுக தலைமைச்செயற்குழு உறுப்பினர் டி.ஆர்.சண்முகசுந் தரம், ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.டி.கல்யாணசுந்தரம், கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கவிதா கல் யாணசுந்தரம்,காரமடை நகர செயலாளர் வெங்கடேஷ், மேட்டுப்பாளையம் முன்னாள் நகராட்சி கமிஷனர் வினோத், காரமடை அரங்கநாதர் கோவில் செயல் அலுவலர் லோகநாதன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
மேலும் விழாக்கு வரும் பக்தர்களுக்கு கோவை பொது பணித்துறை ஸ்ரீஅம்மன் அறக்கட்டளை சார்பில் அதன் தலைவர் வெங்கிடபதி அறக்கட்டளை உறுப்பினர்கள் மவுனசாமி, பழனிசாமி, விஜயதுரை, துரைசாமி, ராதாகிருஷ்ணன், பாலசுப்பிரமணியம், கோபி உள்ளிட்டோர் அன்னதானம் வழங்கி வருகின்றனர்.