கோவை வடக்கு மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் இந்து முன்னணி நடத்தும் 35 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு வருகின்ற 7 ம் தேதி விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது என்றும், அதைத்தொடர்ந்து இரண்டாம் நாள் கோ பூஜை விளக்கு பூஜை அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் நடத்துவது என்றும் 9 ம் தேதி விசர்ஜன ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டம் என முடிவு செய்யப்பட்டது.
மேட்டுப்பாளையம் மற்றும் இதன் சுற்றுவட்டார பகுதிகளில் 400 க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்வது எனவும் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சிலைகளை கரைக்க உள்ள பகுதியான சுப்ரமணியர் கோயில் அருகே உள்ள பவானியாற்றங்கரையோம் மின்விளக்குகள் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்றும் காவல் துறையினரிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து மேற்கு மண்டல காவல்துறை தலைவர் விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் பவானியாற்றக்கரைபகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.. காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை செய்த அவர் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செய்யப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அறிவுறுத்தல்களை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மேட்டுப் பாளையம் உட்கோட்ட காவல்துறை துணைகண்காணிப்பாளர் பாலாஜி, மேட்டுப்பாளையம் காவல் ஆய்வா ளர் மணிகண்டன் மற்றும் உதவி ஆய்வாளர்கள் உடன் இருந்தனர்.



