Homeபிற செய்திகள்தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை துவக்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

தேசிய ஊட்டச்சத்து மாத விழாவினை துவக்கி வைத்தார் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் இயங்கும் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டப் பணிகள் சார்பில் போஷன் அபியான் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு ஊட்டச்சத்து குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேசிய ஊட்ட ச்சத்து மாத விழா நிகழ்ச் சிகளை துவங்கி வைத்தார்.

மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் மாநில அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகள், ஊரக வளர்ச்சி துறை, சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, கல்வித் துறை, தோட்டக்கலைத்துறை மற்றும் அரசின் பிற துறைகளுடன் ஒருங் கிணைத்து செப்டம்பர் மாதம் முழுவதும் “போஷன் மா” என்ற தேசிய ஊட்டசத்து மாத விழா நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட பணிகளின் கீழ் திருவண் ணாமலை மாவட்டத்தில் 18 வட்டாரங்களில் உள்ள அனைத்து அங்கன்வாடி மையங்களில், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் மூலம் கர்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மார்கள், பிறந்தது முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவதற்கு ஆண்டு தோறும் செப்டம்பர் மாதம் முழுவதும் ஊட்டச்சத்து மாத விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு வருடமும் ஒரு சிறப்பு தலைப்பில் தேசிய ஊட்டசத்து மாத விழா செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து இந்த வருடம் செப்டம்பர் 2024 மாதத்தில் “இரத்தசோகை, ஊட்டச்சத்துடன் கூடிய முன்பருவக்கல்வி, வளர்ச்சி கண்காணித்தல், சிறந்த நிர்வாகத்திற்கான தொழில்நுட்பம், ஊட்டச்சத்து தோட்டம் அமைத்தல்” என்ற தலைப்பில் ஊட்டச்ச த்து மாத விழா கொண் டாடப்பட உள்ளது.

தேசிய ஊட்டச்த்து மாத விழாவின் முக்கிய நிகழ்வாக பொதுமக்களுக்கு ஊட்டச்சத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டுமென்ற நோக்கத்தில் துண்டு பிரசுரங்கள் மற்றும் திட்டம் குறித்த விழிப்புணர்வு உறுதிமொழி, கையெழுத்து இயக்கம், ஊட்டச்சத்து கண்காட்சி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை வட்டார அலுவலகங்கள் மற்றும் அனைத்து அங்கன்வாடி மையங்களிலும் 01.09.2024 முதல் 30.09.2024 வரை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட துறை சார்பில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்ச்சியின் முதற் கட்டமாக இன்று ஊட்டச்சத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படு த்தும் வகையில் விழிப்புணர்வு கோ லத்தினை பார்வையிட்டு, ஊட்டச்சத்து விழிப்புணர்வு உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் பொதுமக்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை கையெழுத்திட்டு துவக்கி வைத்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் துவதற்காக ஊட்டச்சத்து நிலைக்கு வாழ்கை சுழற்சி அணுகுமுறை குறித்த துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட சமூக நல அலுவலர் (பொ) சரண்யா, மாவட்ட திட்டஅலுவலர் (ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டம்) மீனாம்பிகை, வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள், போஷன் அபியான் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு துறைசார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

படிக்க வேண்டும்

spot_img