ஈரோடு விஇடி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (இருபாலர்) கணினியியல் துறையும், கணிதவியல் துறையும் ஐசிடி அகாடெமி மற்றும் ஐஜெஐடிசி ஆய்விதழுடன் இணைந்து “கணினி அறிவியல் மற்றும் பயனாக்கக் கணிதவியல் (ஐசிசிஎஸ்ஏஎம் – 23)” என்ற தலைப்பில் பன்னாட்டுக் கருத்தரங்கை நடத்தியது.
கல்லூரி செயலாளர் எஸ்.டி.சந்திரசேகர், முதல்வர் முனைவர் ர.சரவ ணன், ஸ்ரீ கிருஷ்ணா ஆதித்யா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் எஸ்.பழனியம்மாள், இணைப் பேராசிரியர் முனைவர் ஆர்.பார்வதி, நிர்வாக அலுவலர் திரு.எஸ்.லோகேஷ்குமார், கல்விப்புல முதன்மையர் நல்லசாமி,
அமெரிக்காவைச் சேர்ந்த முதுநிலை ஐஇஇஇ உறுப்பினர், ஸ்பெக் டபிள்யுபிசி, கட்டிட வடி வமைப்பாளர், மென் பொருள் மற்றும் வன் பொருள் பொறியாளர் முனைவர் சந்திரசேகர் சக்திவேல், கேரளா விமலா கல்லூரி (தன்னாட்சி), கணிதவியல் துறைத் தலைவர் மற்றும் உதவிப் பேராசிரியர் முனைவர் அஞ்சலி கிஷோர், மலேசியா கர்டின் பல்கலைக்கழக மின்னணு மற்றும் தகவல் பொறியியல் & இணையப் பாதுகாப்புத் துறையின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் சிவராமன் ஈஷ்வரன் உரையாற்றினர்.
இந்தியா மற்றும் அயல்நாடுகளில் உள்ள 54 கல்வி நிறுவனங்களிலிருந்து 102 ஆய்வுக்கட்டுரைகள் பெறப்பட்டன. மாநாட்டின் ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர்கள் ராதிகா, டி.கார்த்திகா, கே.செல்வ நாயகி, முனைவர் ஆர்.தமிழ்ச்செல்வி மற்றும் பல்வேறு கல்விநிறுவனங்களில் இருந்து 810 மாணவர்களும் 32 பேராசிரியர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.