திருப்பூர் மாவட்டம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம், சூரிய நல்லூர் ஊராட்சி, ஜோத்தியம்பட்டி ஊராட்சி, கொக்கம்பாளையம் ஊராட்சி மற்றும் நந்தவனம்பாளையம் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் பல்வேறு திட்டப்பணிகள் செயல் படுத்தப்பட்டு வருகின்றன. அவற்றை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ், செய்தியாளர்கள் பயணத்தின் போது ஆய்வு செய்தார்.
பின்னர் ஆட்சியர் செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
திருப்பூர் மாவட்டத்திற்கு பல்வேறு திட்டப்பணிகளை செயல் படுத்தி வருகிறார் முதல்வர். இந்த திட்டப்பணிகள் பொதுமக்களுக்கு முழுமையாக கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் இன்றைய தினம், திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகு திகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
குண்டம் ஊராட்சி ஒன்றியம், சூரிய நல்லூல் ஊராட்சி வெங்கிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள சமையல் அறை கட்டடத்தினையும், வெங்கி பாளையத்தில் ரூ.5.70 லட்சம் மதிப்பீட்டில் வடிகால் அமைக்கும் பணிகளையும், பிரதம மந்திரி வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.1.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் வீட்டினையும், ஜோத்தியம்பட்டி ஊராட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ. 6.24 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள கதிர் அடிக்கும் தளத்தினையும், 15-வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ் ரூ.5.50 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் 10, 000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியினையும்,
ரூ.1.63 லட்சம் மதிப்பீட்டில் தனிநபர் இல்ல குடிநீர் இணைப்பு பைப்லைன் விஸ்தரிப்பு செய்யும் பணிகளையும், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் ரூ.5.24 லட்சம் மதிப்பீட்டில் ஜோத்தியம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டடத்தினையும், கொக்கம்பாளையம் ஊராட்சி எடையப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.30.47 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறை கட்டடங்கள் கட் டும் பணியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் அரசு ஆரம்பப்பள்ளியில் ரூ.7.43 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கட்டப்பட்டு வரும் சமையல் அறை கட்டடத்தினையும், நந்தவனம் ஊராட்சியில் தூய்மை பாரத இயக்கத்தின் கீழ் ரூ.1.81 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் சுகாதார வளாகத்தினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.22.12 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள தடுப்பனையினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.2.70 லட்சம் மதிப் பீட்டில் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளியில் பள்ளியில் கட்டப் பட்டுள்ள பள்ளிச்சுற்றுச் சுவர் என மொத்தம் ரூ.96.06 லட்சம் மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.
திட்டப்பணிகளை விரைவாக முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண் டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு ஆட்சியர் தா.கிறிஸ்துராஜ் தெரிவித்தார்.
ஆய்வின் போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், குண்டடம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடெஷ்குமார், சுரேஷ்குமார், தாராபுரம் வட்டாட்சியர் ஜெகஜோதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



