மணிப்பூரில் பழங்குடியின பெண்களை நிர்வாணப்படுத்திய கொடூர ஜனநாயக படுகொலை சம்பவத்தைக் கண்டித்தும் வன்முறையைக் கட்டுப்படுத்த தவறிய பாஜக அரசைக் கண்டித்தும் திமுக மகளிரணி சார்பில் மாவட்ட தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
கோவை டாடாபாத்தில் மாவட்ட ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிரணி சார்பில், மாநில மகளிர் தொண்டரணி துணைச்செயலாளர் மாலதி நகராஜ் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், மணிப்பூரில் கலரத்தை கட்டுப்படுத்த தவறிய பாசிச பாஜக அரசை கண்டித்து பதாகைகளை கையில் ஏந்தியவாறு, பாஜக அரசை எதிர்த்து கோஷங்களை எழுப்பினர்.
மேலும் இதுதொடர்பாக மாலதி கூறுகையில்;- மணிப்பூரில் நடக்கும் பாலியல் வன்கொடுமை இந்தனை நாட்களுக்கு பிறகு மோடிக்கு தெரிந்ததாக கூறுவது வெட்ககேடானது.
பாஜக ஆளும் மணிப்பூரில் இவ்வளவு கொடுமைகள் நடந்து வரும் நிலையில், இதுதொடர்பாக வாய் திறக்காத வானதி சீனிவாசன், திமுகவினரை பற்றி தரக்குறைவாக பேசி உள்ளார். இதேபோல், வானதி சீனிவாசன் தொடர்ந்து நடந்து கொண்டால் அவரது வீட்டை முற்றுகையிடுவோம் என கூறினார்.
இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், மேயர் கல்பனா, மாவட்ட அமைப்பாளர்கள் கமலம், கனிமொழி, மங்கையற்கரசி, ரங்கநாயகி, ரதி, மாணிக்கம் மயில்சாமி, மேரிராணி, மண்டல தலைவர்கள் லக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு, தெய்வானை தமிழ்மறை, தனலட்சுமி, மற்றும் நிலைக்குழு தலைவர்கள் உள்ளிட்ட பல்லாயிரம் பேர் கலந்து கொண்டனர்.