தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் துப்புரவு பணியாளர் வேலைவாய்ப்பை தனி யார் மயமாக்கும் வகையில் பிறப் பிக்கப்பட்டுள்ள அரசாணை 152 ஐ வாபஸ் பெற விடுதலை சிறுத் தைகள் கட்சி திமுக அரசை தொடர்ந்து வலியுறுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செயலாளர் ஏ.சி.பாவரசு கூறினார்.
சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் பொல்லான் திருவுருவ படத்திற்கு அவரது நினைவு நாளில் மொடக்குறிச்சியில் பாவரசு, மாநில துணை பொதுச்செயலாளர் கனியமுதன் மாவட்டச் செயலாளர் சிறுத்தை வள்ளுவன் மற்றும் நிர்வாகிகள் தேவன்ந், கமலநாதன், தங்கராசு, சண்முகம் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் பாவரசன் கூறியதாவது: விடுதலை சிறுத்தைகள் கட்சி காண்ட்ராக்ட் சிஸ்டத்தை முழுமை யாக எதிர்க்கிறது. ஏற்கனவே உள் ளாட்சிகளில் தனியார் துறை மூலம் துப்புரவு பணியாளர் நியமிப் பதை எங்கள் தலைவர் தொல் திருமாவளவன் எதிர்த்துள்ளார்.
ஒவ்வொரு மாநகராட்சியிலும் தனித்தனி சட்டங்கள் உள்ளது. அதற்கு ஏற்ப அந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த அரசாணை ரத்து செய்ய தனியாக சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற அரசு உறுதியளித்துள்ளது.
இவ்வாறு தனியார் துறை மூலம் பணியாளர் நியமிக்கும் பழக்கம் கடந்த அதிமுக ஆட்சியில் துவக்கி வைக்கப்பட்டது. அது தொடர்கிறது இது இட ஒதுக்கீடு சமூக நீதி கொள்கையை பாதிக்கும் எனவே தனியார் மயத்தை நாங்கள் எதிர்க்கிறோம்.
இதேபோன்று துப்புரவு பணியாளர்களுக்கு ஒவ்வொரு மாநகராட்சியிலும் வெவ் வேறு சம்பளம் வழங்கப்படுவதை மாற்றி ஒரே மாதிரியான சம்பளம் வழங்க அரசை வலியுறுத்துகிறோம்.
சென்னையில் போக்குவரத்து கழகத்தில் தனியார் துறை மூலம் டிரைவர் நியமிப்பதை எதிர்த்தோம். எனவே அம்முடிவை அரசு கைவிட்டுள்ளது.
தற்காலிகமாக ஓட்டுனர் பற்றாக்குறை காரணமாக 500 ஓட்டுனர்களை தற்போது நியமிக்க அரசு முடிவு எடுத்துள்ளது இவ்வாறு அவர் கூறினார்.