கோவை மாநகராட்சி தெற்கு மண்டலம் செல்வபுரம், ஜீவபாதை மாசாணியம்மன் கோவில் வீதி, அன்னை இந்திரா நகர், வடக்கு ஹவுசிங் யூனிட், ராஜு நகர், தில்லை நகர் பிரதான சாலை மற்றும் லாலா கார்டன் ஆகிய பகுதிகளில் நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத்திட்டம் 2023-24 சிப்பம் 15ன் கீழ் ரூ.102.50 லட்சம் மதிப்பீட்டில் 1.863 மீட்டர் தொலைவிற்கு தார்தளம் புதுப்பித்தல் பணிக்கு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார்.
உடன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகசுந்தரம், துணை மேயர் வெற்றிசெல்வன், துணை ஆணையாளர் சிவகுமார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நா.கார்த்திக், முன்னாள் தொண்டாமுத்தூர் பேரூராட்சி தலைவர் ரவி, மாநகரப் பொறியாளர் சுகந்தி, தெற்கு மண்டல தலைவர் தனலட்சுமி, ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் ராஜலட்சுமி, சிவசக்தி, வசந்தாமணி, ராஜ்குமார், உதவி ஆணையர் அண்ணாதுரை, செயற்பொறியாளர் இளங்கோவன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.