தமிழக அரசால் அந்தியூர் கோபி பகுதிகளில் அறிவிக்கப்பட் டுள்ள வனவிலங்கு சரணாலய திட்டத்தால் பழங்குடியினர் பாதிக் கப்பட மாட்டார்கள் என்று வனத்துறை அமைச்சர் டாக்டர் மதிவேந்தன் தெரிவித்தார்.
ஈரோடு மாவட்டம் மொடக் குறிச்சியில் சுதந்திரப் போராட்ட வீரர் பொல்லான் நினைவு தினம் அரசு சார்பில் நேற்று நடை பெற்றது. பொல்லான் படத்திற்கு மாலை அணிவித்த பின் அவர் கூறியதாவது:
வனவிலங்கு சரணாலய திட்டத்திற்கு அதிமுக எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளது வனத்தை பாதுகாக்க பல்வேறு மத்திய சட்டங் கள் உள்ளன. அதன்படி தான் நடவடிக்கை எடுக்கிறோம். தற்போது தட்பவெப்ப நிலை மாறி அதிக வெப்பத்தை காண்கி றோம் எனவே வனத்தை பாதுகாப்பது அவசியமாகும்.
வன விலங்கு சரணாலயம் அமைத்தால் பழங்குடியினர் பாதிக்கப்பட மாட்டார்கள். அவர்கள் வழக்கம் போல் ஆடு மாடுகளை மேய்க்கலாம். சிறு வன பொருட்களை எடுத்துச் செல்லலாம். வனத்தில் குடி இருக்கும் பழங்குடியினருக்கு அவர்கள் செட்டில்மெண்ட் இடத்திற்கு ஏற்ப பட்டா வழங்கப் பட்டுள்ளது.
அதிலும் சிலருக்கு விடுபட்டுள்ளது. அதை தர நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆனால் வனத்தில் பழங்குடியினர் அல்லாதோர் குடி இருக்கின்றனர். அவர்களுக்கு பட்டா வழங்குவதில் சிரமம் உள்ளது.
எனவேதான் மாற்று இடத்தில் அவர்களை குடி அமர்த்தநடவடிக்கை எடுக்கப்ப டுகிறது. வனம் மற்றும் மலைப் பகுதியில் குடியிருக்கும் பழங் குடியினர் நிலம் மற்றோர்களால் வாங்கப்பட்டது என்றால் அதற்கு நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
அவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்கும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது பொதுவாக ஆதி திராவிடர்களுக்கு என்று தனியாக சுடுகாடு அமைக்கப்படுவதில்லை. பொது சுடுகாடுகள் தான் இருக்கின்றன.
உள்ளாட்சிகள் மூலமாக தற்பொழுது எரிவாயு தகனமேடை அமைக்கப்படும் போது இந்த பிரச்சனைகள் தீரும். மதுரை வீரன் வரலாற்று புத்தகம் குறித்து நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது அரசு அதை பரிசீலிக்கும் பழங்குடியினர் தொன்மை மாறாமல் பாதுகாக்க பழங்குடியினர் நினைவு சின்னம் தாளவாடியில் உருவாக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஏழு கோடி செடிகள் தமிழக வனப் பரப்பில் நடப்பட்டன. நடப்பாண்டு அந்த எண்ணிக்கை மேலும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.