Homeபிற செய்திகள்கோவையில் எபிக், எபிக் லக்ஸ்ஆன் அறிமுகம்

கோவையில் எபிக், எபிக் லக்ஸ்ஆன் அறிமுகம்

கியூப் சினிமா மற்றும் கற்பகம் கிராண்ட்பிளக்ஸ் இணைந்து, கோவையில் எபிக் மற்றும் எபிக் லக்ஸ்ஆன் பிரீமியம் சினிமா அரங்குகளை அறிமுகப்படுத்தியுள்ளன. இதில் தமிழ்நாட்டின் முதல் எபிக் லக்ஸ்ஆன் அரங்கமும், இந்தியாவின் மிகப்பெரிய எல்.இ.டி. சினிமா திரையும் இடம்பெற்றுள்ளன.


எபிக் அரங்கில் பார்கோ 4கே ஆர்ஜிபி லேசர் புரொஜெக்ஷன் மற்றும் உயர் மாறுபாடு லென்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது. எபிக் லக்ஸ்ஆன் அரங்கில் பாரம்பரிய புரொஜெக்ஷனுக்கு பதிலாக எல்.இ.டி. சினிமா தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கியூப் சினிமா தலைமைச் செயல் அதிகாரி ஹர்ஷ் ரோஹத்கி, கற்பகம் குழும திரையரங்குகளின் நிர்வாக இயக்குநர் என். சிவபிரகாசம் ஆகியோர் புதிய அரங்குகளின் சிறப்புகளை தெரிவித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img