இந்திய மருத்துவ சங்கம், கோவை கிளை நடத்திய ஆசிரியர் தின விழாவில் கார்மல் கார்டன் பள்ளி முன்னாள் ஆசிரியர் அ.ஜோ தனராஜ்-க்கு கல்வித்துறையில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை பாராட்டி விருது வழங்கப்பட்டது.
இதனை சூலூர் சட்டமன்ற உறுப்பினர் சுகுமார் வழங்கினார். இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் கோசலராமன், செயலர் டாக்டர் பரமேஸ்வரன், பொருளாளர் பாலமுருகன் மற்றும் முன்னாள் மாநில செயலாளர் டாக்டர் கார்த்திக் பிரபு உள்ளிட்டோர் பாராட்டி பேசினர்.



