பேங்க் ஆஃப் பரோடா, கோவை முதன்மைக் கிளையில் சம்பளக் கணக்கு வைத்திருந்த, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவம னையில் பணிபுரிந்த ஊழியர்களான முருகதாஸ், சண்முகசுந்தரம் ஆகிய இருவரும் பணிக் காலத்தில் உயிரிழந்தனர். தமிழ்நாடு மாநில அரசு சம்பளத் தொகுப்பு (TNSGSP) திட்டத்தின் கீழ், அவர்களுக்கான இறப்பு இழப்பீட்டுத் தொகையை வங்கியின் கோவை மண்டல அலுவலகம் வழங்கியது.
கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடை பெற்ற நிகழ்வின்போது, மருத்துவர் கள் மற்றும் செவிலியர்கள் முன்னி லையில், இழப்பீட்டுத் தொகைக் காசோலைகளை வாரிசுதாரர்களிடம் மருத்துவமனை டீன் கீதாஞ்சலி முன்னிலையில் வங்கியின் மண்டல மேலாளர் ஆர்.கமலகண்ணன் வழங் கினார். உரிய நேரத்தில் இழப்பீட்டுத் தொகையை வழங்கி, துயருற்ற குடும்பங்களுக்கு விரைவான ஆதரவை அளித்த பேங்க் ஆஃப் பரோடா வங்கியை டீன் கீதாஞ்சலி பாராட்டினார்.
TNSGSP திட்டத்தின் கீழ் அரசு ஊழியர்களுக்கான பேங்க் ஆஃப் பரோடா வங்கியின் அர்ப்பணிப்பு, சிறந்த சேவை மற்றும் ஈடுபாட்டிற்கான அங்கீகாரத்தை வெளிப்படுத்துவதாக இந்த நிகழ்வு அமைந்தது.



