கோவை நிர்மலா மகளிர் கல்லூரியில் 42வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரி மேரி பபியோலா கல்லூரியின் நோக்கம் குறித்து பேசினார்.
சிறப்பு அழைப்பாளர் திருவாரூர் பல்கலைக்கழக துணைவேந்தர் சுலோச்சனா சேகர் நிர்மலா மகளிர் கல்லூரியின் பாரம்பரியத்தைப் பாராட்டினார்.
சவால்களை வளர்ச்சியாகக் கருதுமாறும், முடிவெடுக்கும் தளங்களில் தமக்கான இடத்தைப் பிடிக்கும் அதே வேளையில் மற்ற பெண்களையும் முன்னேற்றிக் கொண்டு வருமாறும் கேட்டுக்கொண்டார்.
கல்லூரியின் செயலர் அருட்சகோதரி குழந்தை தெரேஸ் மாணவியரின் எதிர்காலம் ஒளிமயமானதாக மலர வேண்டும் என வாழ்த்தினார்.
தொடர்ந்து சிறப்பு அழைப்பாளர் பட்டமளிப்பு விழாவில் 890 மாணவிகளுக்குப் பட்டம் வழங்கினார்.



