Homeபிற செய்திகள்கோவை அரசு மகளிர் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

கோவை அரசு மகளிர் கல்லூரியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கம்

தமிழ்நாடு அரசு சார்பில் அக்டோபர் மாதம் மார்பகப் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாக அனுசரிக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை, புலியகுளம், அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் உதவி மையம் மற்றும்
இளைஞர் செஞ்சிலுவை சங்கம் இணைந்து புற்றுநோய் கண்டறிதல் மற்றும் குணப்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் முதல்வர் முனைவர் கிளாரா குணபூரணி சற்குணர் தலைமையில் நேற்று நடைபெற்றது.
கல்லூரி கருத்தரங்க அறையில் நடந்த இந்நிகழ்வில், புற்றுநோய் மருத்துவர் ஜோயல் பிரான்சிஸ் புற்றுநோய் விழிப்புணர்வு குறித்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். மகளிர் உதவி மையம் மற்றும் இளைஞர் செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் அம்சவேணி மற்றும் முனைவர் அக்பர் அலி ஆகியோர் கருத்தரங்க ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img