தூத்துக்குடியில் வாழ்க்கைக்காக ஓடுவோம்; போதைப் பொருளுக்கு எதிராக ஓடுவோம்” என்ற விழிப்புணர்வு மையக்கருத்துடன் மாரத்தான் போட்டி நடந்தது.
கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் நடந்த போட்டியை தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி நிர்வாக துணைத் தலைவர் அசோக்குமார் தொடங்கி வைத்தார்.
நிறுவன தலைவர் ரைபின் தார்ச்சியூஸ் வரவேற்றார்.
சிருஷ்டி என்டர்பிரைசஸ் நிறுவனர் பெர்தினால் தார்ச்சியூஸ், கேம்ஸ் வில் ஸ்போர்ட்ஸ் அகாடமி இயக்குனர் விஸ்வ பாரதி முன்னிலை வகித்தனர்.
கல்பகா கெமிக்கல் இயக்குனர் கணேசன், எஸ்.ஆர்.ஆர்.ஏ மருத்துவமனை டாக்டர் நவீன் வாழ்த்துரை வழங்கினர்.
8 முதல் 15 வயது வரை 3 கி.மீ., 15 முதல் 60 வயது வரை 5 கி.மீ., 18 முதல் 60 வயது வரை 10 கி.மீ. என போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் 2,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.



