fbpx
Homeபிற செய்திகள்தருமபுரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

தருமபுரியில் தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

தருமபுரி மாவட்ட நிர்வாகம் , தமிழ்நாடு மாநில ஊரக / நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மற்றும் மாவட்ட தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம் இணைந்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டார இயக்க மேலாண்மை அலகில் 05/11/2024 முதல் 07/11/2024 வரை தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பயிற்சி உபகரணங்களை மகளிர் திட்ட இயக்குனர். அ.லலிதா வழங்கினார்கள்.

இப்பயிற்சியில் அரூர் பேரூராட்சி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி பேரூராட்சி சார்ந்த மகளிர் சுய உதவி குழு தொழில் முனைவோர்களுக்கு தொழில் நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்கான சந்தைப்படுத்துதல் மற்றும் மதிப்பு கூட்டுதல் தொடர்பான பயிற்சி வழங்கப்பட்டது இப்பயிற்சியினை தொழில் முனைவோர் மேம்பாட்டு கழக மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கௌதம் மற்றும் பயிற்சியாளர்கள் வழங்கினார்கள்.

பயிற்சியில் 50 மகளிர் தொழில் முனைவோர் கலந்து கொண்டு பயிற்சி பெற்று பயன்பெற்றார்கள். இதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்க உதவி திட்ட அலுவலர் கா .முருகேசன் மற்றும் அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி சமுதாய அமைப்பாளர்கள் க.ஆயிஷா பிரதோஷ் மற்றும் சி.கலைச்செல்வி ஆகியோர் செய்திருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img