தி ஃப்ரண்ட்லைன் அகாடமி மாணவர்கள் அவதார் எக்ஸ் – ஸ்ட்ரீம் 2024 நிகழ்வில் பங்கேற்று தமது அக்ரிகல்ச்சர் ரோவர் தயாரிப்பிற்காக உயர் வெகுமதி பெற்றனர்.
கோவை, நேரு பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியினரால் நடத்தப்பட்ட அவதார் எக்ஸ் – ஸ்ட்ரீம் 2024 இல் பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 2,500 மாணவர்கள் கலந்து கொண்டனர். அதில் தி ஃப்ரண்ட்லைன் அகாடமி மாணவர்கள் அஸ்வின், சபரிஷ், முஹம்மத் ஆசிஃப் ஆகியோர் திரு ஸ்ரீனிவாசன் முதுநிலை இயற்பியல் ஆசிரியரின் வழிகாட்டுதலின் பேரில் கலந்து கொண்டு தமது புதிய கண்டுபிடிப்பான அக்ரிகல்ச்சர் ரோவர் தயாரிப்பிற்காக பரிசுத் தொகையாக ரூ.10,000 பெற்றனர். அதோடு பாடல் பாடுதல் (குழுவினர்) நிகழ்வில் இரண்டாம் பரிசினையும், இசைக் கருவியை வாசிப்பதில் மூன்றாம் இடத்தையும் பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவ மாணவியரையும் வழிகாட்டி ஆசிரியரையும் பள்ளியின் தாளாளர் டாக்டர்.சிவசாமி செயலாளர் டாக்டர். சிவகாமி இயக்குனர் திரு.சக்திநந்தன் இணை செயலாளர் திரு. வைஷ்ணவி நந்தன் முதல்வர் டாக்டர். வசந்த ராஜ் மற்றும் பள்ளியின் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் ஸ்ரீவித்யா ஆகியோர் பாராட்டினர்.