இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பாம்பேயின் தொழில்நுட்ப பிசினஸ் இன்குபேட்டர் அமைப்பான புத்தாக்கம் – தொழில் முனைவுக்கான சங்கம் (SINE) 20 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் விதத்தில் “புத்தாக்க நாடு: நடப்பு நிலையை சீர்குலைக்கும் தொழில்நுட்பங்கள் யுகத்தில் இந்தியாவின் திறன் மற்றும் தொழில்முனைவு திறனையும், பேரார்வத்தையும் சிறப்பாக பயன்படுத்துவது” என்ற தலைப்பில் இரு நாள் நிகழ்வை நடத்த உள்ளது.
இந்த மாதம் 28 மற்றும் 29ம் தேதிகளில் இக்கருத்தரங்கு நிகழ்வில் சிறப்புரைகள், புதிய கண்ணோட்டத்தை வழங்கும் குழு விவாதங்கள் உள்ளிட்ட அமர்வுகள் இடம் பெறுகின்றன.
இது குறித்து ஐஐடி பாம்பேயின் துணை இயக்குநர் மிலிந்த் அத்ரே கூறுகையில், “தனது தனித்துவமான திறமை மற்றும் தொழில்முனைவு ஆர்வத்தாலும், மனப்பான்மையினாலும் உலகளாவிய புத்தாக்கத்தை இந்தியா எப்படி முன்னெடுத்துச் செல்ல முடியுமென்று இந்நிகழ்வு முன்னிலைப்படுத்தும்“ என்றார்.
தொடர்ந்து, SINE-ன் பொறுப்பு பேராசிரியர் சந்தோஷ் J. கர்புரே கூறுகையில், “தொடங்கப்பட்ட நாளிலிருந்து 80%-க்கும் அதிகமான ஸ்டார்ட்-அப் பிழைப்பு விகிதத்தை SINE சாதித்திருக்கிறது” என்றார்.
SINE அமைப்பின் தலைமைச் செயலாக்க அதிகாரி ஷாஜி வர்கீஸ் கூறுகையில், “இன்றைக்கு எமது சேவையைப் பெற்ற நிறுவனங்கள் ஒட்டுமொத்தமாக $3.56 பில்லியனுக்கும் அதிகமான ஒருங்கிணைந்த சொத்து மதிப்பைக் கொண்டிருக்கின்றன” என்றார்.