கோவை கதிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செயல்பட்டு வரும் இந்திய செஞ்சிலுவை சங்கம் சார்பாக போதை இல்லா சமுதாயம் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக சாரல் மருத்துவமனை, புதிய பாதை மருத்துவமனை, குழந்தைகள் மருத்துவ மையம் ஆகியவற்றின் தலைவர் செல்வகுமார் பார்த்திபன் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.
போதை பொருளின் பயன்பாட்டை தடுப்பது குறித்தும் தவறான பழக்கத்திலிருந்து விடுபடுவது குறித்தும் குடும்பத்தில் உள்ள அன்பர்கள் போதைப் பொருளுக்கு அடிமைப்பட்டு இருந்தால் எவ்வாறு அவர்களை மீட்டெடுப்பது என்பது குறித்தும் மாணவர்களுக்கு விழிப்புணர்வு அறிவுரை வழங்கினார்.
முன்னதாக இந்நிகழ்வினை கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.கற்பகம் துவங்கி வைத்து வாழ்த்துரை வழங்கினார். இவ்விழிப்புணர்வு நிகழ்ச்சியினை இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் வி.வினோதினி ஏற்பாடு செய்திருந்தார்.
இதில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கு கொண்டு பயன் பெற்றனர்.