நீலகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் அரசு உறுதிமொழி குழுவின் தலைவர் வேல்முருகன் மற்றும் உறுப்பினர்களான அருள், நல்ல தம்பி, மோகன், ஜெயக்குமார் ஆகியோர் ரூ.461.18 கோடி செலவில் உதகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு, கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி கௌஷிக் உட்பட பலர் உள்ளனர்.
தொடர்ந்து வேல்முருகன் பேசுகையில், நீலகிரி மாவட்டத்திற்கு மருத்துவ கல்லூரி துவங்க வேண்டும் என்ற அடிப்படையில் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மாவட்டத்தில் பல்நோக்கு மருத்துவமனை கட்டுவதற்கான உறுதிமொழி ஆய்வு செய் யப்பட்டுள்ளது. எம் ஆர் ஐ ஸ்கேன் வேண்டும் என்ற உறுதிமொழி தற்போது நிறை வேற்றப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டத்திற்கு ரூ.440 கோடி அளவிற்கு மருத்துவமனைக்கு செலவு செய்துள்ளது. மாவட்டத்தின் மருத்துவ கல்லூரி குறித்த நான்கு உறுதிமொழிகள் நிறை வேற்றப்பட்டுள்ளது” என்றார்.