Homeபிற செய்திகள்கரூர் தரகம்பட்டியில் கால்நடை மருந்தகம் திறப்பு

கரூர் தரகம்பட்டியில் கால்நடை மருந்தகம் திறப்பு

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, தமிழகத்தில் நடைபெற்று வந்த பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காணொளி காட்சி வாயிலாக துவக்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட் டம், கடவூர் தாலுகா, தரகம்பட்டி பகுதியில் ரூ.54 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கால்நடை மருந்தகத்தை முதலமைச்சர் காணொளி காட்சி வாயி லாக திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற கிருஷ்ண ராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் சிவகாமசுந்தரி, குத்துவிளக்கு ஏற்றி வைத்து மருத்துவமனை பணிகளை துவக்கி வைத்தார். மேலும் கால் நடை மருத்துவமனையை சுற்றி பார்த்து, தேவையான வசதிகள் செய்யப்பட் டுள்ளதா? என ஆய்வு செய்தார்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டு வைத்தார்.

இதனைத் தொடர்ந்து மாவத்தூர் ஊராட்சி உள்ள சின்னாம்பட்டி பகுதியில் பாலவிடுதி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பகுதி நேர நியாய விலைக் கடையை குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைத்தார்.
மேலும், அந்த கடையில் பொருள்கள் வாங்கும் பயனாளிகளுக்கு பொருட்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கீதா செந்தில் மோகன், கடவூர் ஒன்றிய துணை செயலாளர் பிரபாகரன், கால்நடை மருத்துவமனை மருத்துவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊர் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப் பித்தனர்.

படிக்க வேண்டும்

spot_img