கண் மருத்துவவியல் மாணவர்களுக்காக தேசிய, முதுகலை தொடர் மருத்துவ கல்வி திட்ட மான கல்பவிருக்ஷா 23 – 16-வது வருடாந்திர தொடர் மருத்துவக்கல்வி (CME) செயல்திட்டத்தை டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனை, சென்னை யிலுள்ள அதன் ஆராய்ச்சி மற்றும் கல்வி பிரிவான கண் ஆராய்ச்சி மையத்தின் ஒத்துழைப்போடு நடத்தியது.
கல்பவிருக்ஷா என்ற பெயரில் 2007-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தேசிய அளவிலான முதுகலை பட்டதாரி மாணவர் களுக்கான CME செயல்திட்டத்தில், இதற்கான தேர்வுகளை எழுதவிருக்கிற 35- க்கும் அதிகமான மருத்துவ கல்லூரிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
AIOS- ன் அறிவியல் குழு தலைவர், டாக்டர் நம்ரதா ஷர்மா தொடங்கி வைத்து பேசியதாவது: உருவாகிவரும் கண் மருத்துவர்கள் அவர் களது அறிவை மேம்படுத் திக்கொள்ளவும், சமீ பத்திய மருத்துவ செயல்முறை களை அறிந்துகொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்கும் இந்நிகழ்விற்காக டாக்டர்அகர்வால்ஸ் குழுமத்தை மனமார பாராட்டுகிறேன் என்றார்.
தலைமை தாங்கி டாக்டர் அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகள் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்கு நர் டாக்டர் அமர் அகர் வால் கூறியதாவது:
கல்பவிருக்ஷா, மருத்துவ நேர்வுகள் விளக்கக் காட்சி யுடன், அனுபவம் மிக்க கல்வியாளர்களோடு விரிவான விவாதத்தில் ஈடுபடவும், நேரடியாக ஆலோசனை குறிப்புகளைப் பெறவும் பங்கேற்பாளர்களுக்கு வாய்ப்பளிக்கிறது.
சிறப்பான திறன்களை பெற்றுக்கொள்ளவும், நோயாளிகள் உட்பட பொது சமூகத்திற்கு சேவையாற்றவும் கண் மருத் துவர்களுக்கு இத்திட்டம் பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.
சிறப்பு விருந்தினராக டாக்டர் சந்தோஷ் ஜி. ஹொனாவர் பங்கேற்றார்.
செய்முறை அமர்வில் மாறுகண் போன்ற மிகச் சிரமமான நேர்வுகளை பரிசோதிப்பது அல்லது ரெட்டினோஸ்கோப்பி / கோனியோஸ்கோப்பி போன்ற நோயறிதல் செயல்முறை மீது விளக்க மளிக்கப்பட்டது.