கோவை, அரசூரில் உள்ள கே.பி.ஆர். பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ‘அலும்னி ஹோம்கம்மிங்’ என்ற பெயரில் கல்லூரி தொடங்கியது முதல் கடந்த ஆண்டு வரை படித்த முன்னாள் மாணவர்கள், பணியாற்றிய பேராசி ரியர்கள் சந்திப்பு மாபெரும் விழா வாக நடந்தது.
600-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ, மாணவிகள், முன்னாள் கல்லூரி முதல்வர் மற்றும் பேரா சிரியர்கள் கலந்து கொண்டனர்.
கே.பி.ஆர். கல்லூரி தொடக்க ஆண்டில் முதன் முதலில் படித்து பட்டம் பெற்ற மாணவ, மாணவிகள் மற்றும் முன்னாள் பேராசிரியர்களை சிறப்பிக்கும் வகையில் நினைவு கேடயம் வழங்கியது.
முனைவர் கே.பி.இராமசாமி, கேபிஆர் குழுமத்தின் தலைவர், முன்னாள் மாணவர்களின் சங்கமத்தை பற்றி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி யதுடன் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
கல்லூரியின் முதல்வர் முனை வர் மா.இராமசாமி, தலைமை தாங்கி, “அனைத்து முன்னாள் மாண வர்களின் வளர்ச்சியைக் கண்டு நாங் கள் பெருமிதம் கொள்கிறோம் மற்றும் அதுவே கல்லூரியின் வளர்ச்சிக்கும் தற்போதுள்ள மாணவர்களின் வெ ற்றிப்பாதைக்கும் வழிவகுக்கும்“, என்றார்.
தற்போது கல்லூரியில் பயின்று கொண்டிருக்கும் மாணவர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றும் மற்றும் சுயதொழில் செய்யும் முன்னாள் மாணவர்கள் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர் .முன்னாள் மாணவர்களை கவரும் வகையில் விளையாட்டுகள் மற்றும் அரங்குகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.