Homeபிற செய்திகள்காகிதத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம்

காகிதத்துறையில் டிஜிட்டல் தொழில்நுட்பம்

தொழில்நுட்ப வளர்ச்சி அனைத்து துறைகளிலும் பெரிய அளவில் மாற்றங்களை ஏற்ப டுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய கூழ் மற்றும் காகிதம் டெக்னிக்கல் சங்கம் (IPPTA) சார்பில் ஆண்டு பொதுக்கூட்டம் மற்றும் சர்வதேச அளவி லான கருத்தரங்கு கோவை நவஇந்தியாவில் உள்ள ரேடிசன் ப்ளூ ஹோட்ட லில் நடக்கிறது.

இக்கருத்தரங்கு ‘‘கூழ் மற்றும் காகித தொழில் நிறுவனங்களில் எலக்ட்ரிக் கல்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஆட்டோமேஷன் மற்றும் டிஜிட்டல் தொழில் நுட்பத் தின் மூலம் செயல்திறனை மேம்படுத்துதல்” என்ற கருப் பொருளில் வரும் 26, 27 ஆகிய இரண்டு நாட்கள் காலை 9.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

இதில், புகழ்பெற்ற தொழில்நுட்ப வல்லுநர் கள், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த பொறியாளர்கள் ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பிக்க வுள்ளனர். மொத்தமாக 425க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் கலந்து கொள்வார்கள்.
இந்த கருத்தரங்கை கூடுதல் தலைமைச்செயலாளர், தமிழ்நாடு நியூஸ் பிரிண்ட், பேப்பர்ஸ் லிமிடெட் டாக்டர் சந்தீப் சக்சேனா ஐஏஎஸ் துவக்கி வைக்கிறார். டாடா டெக்னா லஜிஸ், பெங்க ளூரு குளோபல் பிராக்டீஸ் ஹெட் கௌதமன் ஸ்வர்ணம், உரையாற்றுகிறார்.

படிக்க வேண்டும்

spot_img