கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் செயல்பட்டு வரும் யுனைடெட் கல்வி நிறுவனங்களின் சார்பாக போதை ஒழிப்பு விழிப்புணர்வு விளையாட்டுப்போட்டிகள் பள்ளி மாணவர்களிடையே நடத்தப்பட்டது.
19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான கால்பந்து மற்றும் வாலிபால் போட்டிகளும், பெண்களுக்கான வாலிபால் போட்டிகளும் நடைபெற்றன.
இந்நிகழ்ச்சியில், 33 பள்ளிகளைச் சேர்ந்த அணிகள் பங்கு பெற்றனர்.
இந்நிகழ்ச்சியை மாவட்ட விளையாட்டு ஆய்வாளர் முனைவர் குமரேசன், யுனைடெட் கல்வி நிறுவனங்களின் தாளாளர் சண்முகம் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
தொடர்ந்து கால்பந்து போட்டியில் முதலிடத்தை கே பி எம் ரத்தினம் கல்லூரி அணியும், இரண்டாம் இடத்தை ஸ்ரீ ராகவேந்திரா பள்ளி அணியும், மூன்றாம் இடத்தை விவேகப் பள்ளி அணியும் பெற்றிருந்தது.
ஆண்களுக்கான வாலிபால் போட்டியில் முதல் இடத்தை அகர்வால் மேல்நிலைப் பள்ளியும், பெண்களுக்கான வாலிபால் போட்டியில் முதலிடத்தை இருகூர் அரசு மேல்நிலைப் பள்ளி அணியும் பெற்றிருந்தனர்.
பரிசளிப்பு விழாவில் ரோட்டரி கோயம்புத்தூர் எலைட் தலைவர் மணிகண்டன், ஜே எம் ஜே ஹவுசிங் லிமிடெட் இயக்குனர் சிஜோ டேவிஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்கள்.