டிசம்பர் 12ம் தேதி டெல்லியில் இந்திய தொழில் கூட்டமைப்பின் வருடாந்திர தொழில்நுட்பம், அறிவுசார் சொத்து மற்றும் தொழில்துறை, கல்வித்துறை கூட் டாண்மை மாநாடு நடைபெற்றது.
இதில் தொழில்துறை மற்றும் கல்வித்துறைக் கூட்டாண்மையால் ஆராய்ச்சி மற்றும் புதுப்படைப்புகளில் சிறந்து விளங்கும் கல்வி நிறுவனங்களை அங்கீகரிக்கும் விதமாக இவ்விருது தங்கம், வைரம், மற்றும் பிளாட்டினம் ஆகிய பிரிவுகளில் வழங்கப்பட்டது.
இதில் கோவை அரசூரில் உள்ள கேபிஆர் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரி முதலாவது சிஐஐ தொழில்துறை & கல்வித்துறை கூட் டாண்மை விருதுகள் 2024ல் தனியார் கல்வி நிறுவனங்கள் பிரிவில் உயரிய பிளாட்டினம் விருதை பெற்றுள்ளது.
இவ்விருது குறித்து கல்லூரி முதல்வர் முனைவர் சரவணன் பேசுகையில், “இந்த விருது கேபிஆர் பொறியியல் கல்லூரி ஒரு தொழில்துறை சார்ந்த நிறுவனம் என்பதை நிரூபிக்கிறது” என்றார்.
கல்லூரியின் தொழில்துறை, கல் வித்துறை கூட்டாண்மை இயக்குநர் ஆர் கிருபா சங்கர் பேசுகையில்,”30 வெவ்வேறு மதிப்பீட்டு அளவுருக்களில் மதிப்பீடு செய்யப்பட்டப் பின் இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
தொழில்துறையுடன் தொடர்புகளை வலுப்படுத்துவதில் எங்கள் மாணவர்கள், பேராசிரியர்கள், மற்றும் பணியாளர்களின் கூட்டு முயற்சியை இவ்விருது அங்கீக ரிக்கிறது” என்றார்.