fbpx
Homeபிற செய்திகள்அகில இந்திய எழுவர் கால்பந்து போட்டி: கோவை வழக்கறிஞர்கள் அணி அசத்தல்

அகில இந்திய எழுவர் கால்பந்து போட்டி: கோவை வழக்கறிஞர்கள் அணி அசத்தல்

கோவாவில் நடைபெற்ற அகில இந்திய வழக்கறிஞர்களுக்கான எழுவர் கால்பந்தாட்ட போட்டிகளில் மாஸ்டர்ஸ் பிரிவில் கோவை வழக்கறிஞர் சங்கம் 3ம் பரிசு வென்றது.

கோவாவில் கோவா லாயர்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கோவா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் சார்பில் அகில இந்திய வழக்கறிஞர்களுக்கிடையேயான எழுவர் கால்பந்தாட்ட போட்டி நடைபெற்றது.

கடந்த நவ.22, 23 ஆகிய 2 நாட்கள் நடந்த போட்டிகளில் கோவா, சென்னை ஹைகோர்ட், கேரளா, டெல்லி, பெங்களூர், கல்கத்தா, கோவை உள்ளிட்ட பல்வேறு நீதிமன்ற வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

இதில் மாஸ்டர்ஸ் பிரிவில் கோவை வழக்கறிஞர் சங்கம் சார்பில் வழக்கறிஞர் கால்பந்து அணியின் தலைவர் கணேசன் ஏற்பாட்டில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் 3ம் இடம் பெற்றனர்.

தொடர்ந்து, இந்த அணியில் விளையாடிய வழக்கறிஞர்கள் நிக்கோலசு, விக்டர், புலி விசயகுமார், கார்த்திக், ஜே.அசோக், செந்தில்தீபன், லூயிஸ் தாமஸ், முகமது யாக்கூப், ஆர்.அசோக், தினேஷ் ஆகியோருக்கு கேடயங்கள் வழங்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img