fbpx
Homeதலையங்கம்அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைத்த திருவடி அறக்கட்டளை

அரசு தொடக்கப்பள்ளி கட்டிடத்தை சீரமைத்த திருவடி அறக்கட்டளை

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே பாளையத்தானூர் பகுதியில் சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 28 மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி மேற்கூரைகள் அவ்வப்போது உடைந்து விழுந்து வந்தன. மேலும் மேற்கூரைகள் விரிசல் அடைந்துள்ளதால் மழைக்காலங்களில் பள்ளி வகுப்பறையிலேயே மழைநீர் ஒழுகி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதுமட்டு மல்லாமல் அப்பள்ளியின் சுற்றுச் சுவரும் தரமற்ற நிலையில் இருந்தது.

இந்த தகவல் அறிந்து உடையவர் திருவடி அறக்கட்டளையினர் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அனுமதியுடன் பள்ளியை சீரமைக்க முன்வந்தனர். ரூ.3,54,000 மதிப்பீட்டில் பள்ளி வகுப்பறைகள் மற்றும் மாணவர்களுக்கான கழிவறைகள் உள்ளிட்டவற்றை சீரமைத்து மாணவர்கள் பயன்பாட்டுக்கு வழங்கினர்.

படிக்க வேண்டும்

spot_img