fbpx
Homeபிற செய்திகள்தருமபுரியில் கோமாரி நோய்க்கு 3,56,000 டோஸ் மருந்துகள் செலுத்த இலக்கு

தருமபுரியில் கோமாரி நோய்க்கு 3,56,000 டோஸ் மருந்துகள் செலுத்த இலக்கு

தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், பாளையம்புதூரில் கால்நடை
பரா மரிப்புத்துறையின் சார்பில் 6வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் சாந்தி துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: தருமபுரி மாவட்டத்தில் 3,46,600 பசு மற்றும் எருமை இனங்கள் உள்ளன. இவற்றில் 4 மாத வயதிற்கு மேற்பட்ட கால்நடைகளுக்கு தேசிய கால் நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் 6-வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி பணிமேற்கொள்ள மொத்தம் 3,56,000 டோஸ்கள் கோமாரி நோய் தடுப்பூசி மருந்துகள் மத்திய அரசால் வழங்கப்பட்டுள்ளது. இந்த மருந்துகளை கால்நடைகளுக்கு செலுத்திட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும் இன்று 16ம் தேதி முதல் வருகின்ற ஜனவரி 1 வரை மூன்று வார காலத்திற்கு சிறப்பு முகாம்கள் மூலமாக கோமாரி நோய் தடுப்பூசி இலவசமாக போடப்படுகிறது.

இம்முகாம்கள் மூலமாக மாவட்டத்திலுள்ள 4 மாத வயதிற்கு மேற்பட்ட அனைத்து பசு மற்றும் எருமை இனங்களுக் கும் தடுப்பூசி போடப்பட உள்ளது. விடுபட்ட கால்நடை களுக்கு தடுப்பூசி செலுத்தும்பணி 06.01.2025 முதல் 15.01.2025 முடிய மேற் கொள்ளப்படும்.

கால்நடை வளர்ப்போர் 100 சதவீதம் தங்களுடைய கால்நடைகளுக்கு
இலவசமாக கோமாரி தடுப்பூசி போட்டு பயன்பெறுமாறும், விவரங்க ளுக்கு அருகிலுள்ள கால்நடை மருந்தகம், கால்நடை கிளை நிலையம் மற்றும் கால்நடை மருத்துவமனையை அணுகியும், கட்டணமில்லா தொலைபேசி எண் 1077 மற்றும் கைபேசி எண்கள் 9445001113, 9445032563, 9443077435, 8144874747–ஐ தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத்தொடர்ந்து, இம்முகாமில் 384 கால்நடை களுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடப்பட்டது. மேலும், 50 விவசாயிகளுக்கு தாது உப்பு கலவையினை மாவட்ட ஆட் சித்தலைவர் சாந்தி வழங்கினார்.

இம்முகாமில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தடங்கம் பெ.சுப்பிரமணி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் (கூ /பொ) மரு.கோ.இராமகிருஷ்ணன், தருமபுரி உதவி இயக்குநர் மரு.ஆர்.ரமேஷ், கால்நடை நோய் புலனாய்வு பிரிவு உதவி இயக்குநர் மரு.ரவிச்சந்திரன், பல்கலைக்கழக கால்நடை ஆராய்ச்சி மையத்தலைவர் மரு.கண்ணதாசன், பாளையம் புதூர் ஊராட்சி மன்றத்தலைவர் சுப்பிரமணியன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img