கோவை, கிணத்துக் கடவு, அரசம்பாளையம் அமிர்தா வேளாண்மை கல்லூரியில் பயிலும் நான்காம் ஆண்டு மாண வர்கள் ஆனந்த் கார்த்திக், ஹர்ஷிதா, ஜெயப்பிரியா, இந்துமதி, கன்ஸா அகமத், நவின்,ரேவந்த், ரோஹித் கிருஷ்ணன்,ஸ்ரீ லக்ஷ்மி, வாசுகி, அதுல் கிருஷ்ணா கிராமப்புற பயிற்சி திட்டத்தின்கீழ், சொக்கனூர் கிராமத்தில் ஊரக மதிப்பீடு பங்கேற்பு திட்டத்தில் சேகரித்த தரவுகளின் அடிப்படையில் மாணவர்கள் இப்பகுதி விவசாயிகளுக்கு செயல் விளக்கத்தின் மூலம் தங்கள் பகுதியில் நிலவும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பதற்காக விழிப்புணர்வு நடத்தினர்.
அதன் அடிப்படையில் நீரிழந்த தக்காளி, சூரிய உலர்த்துதல் மற்றும் சூரிய கூடார உலர்த்தி ஆகியவற்றின் முக்கியத்து வங்களை குறித்து விளக்கினர்.
இதில் இரண்டாம் தர தக்காளியின் மதிப்பு கூட்டுதல் பற்றி அறிந்து கொள்ள விவசாயிகள் ஆர்வம் காட்டினர்.
மேலும் இந்நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் முனைவர் சுதீஷ் மணாலில், இத்திட்ட ஒருங்கிணைப்பாளர் முனைவர் சிவராஜ், பேராசிரியர்கள் முனைவர் சத்யப்பிரியா, முனைவர் பிரியா, முனைவர் பூபதி மற்றும் முனைவர் கார்த்திக் ராஜா ஆகியோரின் வழிகாட்டுதலின் கீழ் நடைபெற்றது.