fbpx
Homeபிற செய்திகள்ரூ.1.30 கோடி செலவில் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்- ஆ.ராசா எம்.பி. துவக்கி வைத்தார்

ரூ.1.30 கோடி செலவில் மேட்டுப்பாளையம் நகராட்சி பகுதியில் வளர்ச்சிப் பணிகள்- ஆ.ராசா எம்.பி. துவக்கி வைத்தார்

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 29 வது வார்டு மணி நகர் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உயர் நிலைப் பள்ளியில் 6 வது மாநில பகிர்வு நிதி திட்டத்தில் ரூ.21 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள அறிவியல் ஆய்வகத்தை பள்ளி மாணவர்களின் கல்வி பயன்பாட்டிற்காக நீலகிரி தொகுதி நாடா ளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா திறந்து வைத்தார்.

இதனை தொடர்ந்து ரூபாய் 15 லட்சம் மதிப்பில் புதிய கழிப்பறை கட்டுவதற்கான பணிகளையும், ரூபாய் 17.30 இலட்சம் மதிப்பில் பள்ளியின் சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணிகளையும் தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து, நக ராட்சிக்கு உட்பட்ட 30 வது வார்டு சாந்தி நகர் பகுதியில் புதிதாக ரூபாய் 38 இலட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள பசுமை பூங்காவை பொது மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

மேலும் நகராட்சியின் 2 வது வார்டில் ரூபாய் 38லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்டுள்ள பொழுது போக்கு மற்றும் குழந்தைகள் விளையாட்டு பூங்காவினையும் மக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியின் போது மாவட்ட செயலாளர் தொண்டமுத்தூர் ரவி, மேட்டுப்பாளையம் நக ராட்சி தலைவர் மெஹரீபா பர்வின், துணைத்தலைவர் அருள்வடிவு, நக ராட்சி ஆணையர் அமுதா, நக ராட்சி பொறியாளர் ராமசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கள் அசரப்அலி, டி.ஆர்.சண்முகசுந்தரம், முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் பா.அருண் குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் சுரேந்திரன், கிழக்கு ஒன்றிய செய லாளர் எஸ்.எம்.டி. கல்யாண சுந்தரம், நகர செயலாளர்கள் முகமது யூனுஸ்,முனுசாமி,சாகுல் ஹமீது உசேன், உதவி பொறியாளர் நிரஞ்சனா, ரமேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img