காரமடை ரோட் டரி சங்கத்தின் சார் பில் எஸ்விஜிவி மெட்ரி குலேஷன் மேல் நிலைப் பள்ளியில் இன்ட் ராக்ட் கிளப் புதிய நிர்வா கிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது.
ரோட்டரி சங்க தலைவர் ஆர்.சோமசுந்தரம் தலைமை தாங்கினார் எஸ் விஜிவி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி தாளாளர் டாக்டர் பழனிச்சாமி முதல்வர் சசிகலா செய லாளர் ராஜேந்திரன் அறங் காவலர் தாரகேஸ்வரி மற்றும் குரு சரண் ஆகியோர் முன்னிலை வகித்தனர் செயலாளர் சரவணகுமார் வரவேற்று பேசினார் .
நிகழ்ச்சியில் மாவட்ட இன்ட்ராக்ட் கிளப் திட்ட தலைவர் ராஜலட் சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்து சிறப்புரையாற்றினார் .
தலைவராக கே எஸ் வர்ஷா செயலாளராக யூதிக்ஷா பொருளாளராக ஏஆர்கே.ரக்ஷா உட்பட இயக்குனர்கள் பதவி ஏற்றனர். ரோட்டரி சங்க உதவி ஆளுநர் வேணு சங்கர் அச்சம் தவிர் திட்ட மாவட்ட தலைவர் சிவ சதீஷ்குமார், பொருளாளர் கங்கா பழனிச்சாமி ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். முடிவில் செயலாளர் யுதிக்ஷா நன்றி கூறினார்.