fbpx
Homeபிற செய்திகள்தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பு ஆர்ப்பாட்டம்

கோவை மண்டல தென்னிந்திய திருச்சபைகளின் வாலிபர் அமைப்பினர் சார்பாக கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தென்னிந்திய திருச்சபைகள் மண்டல அலுவலகம் முன்பாக கருப்பு சட்டை அணிந்தபடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில் நாடு முழுவதும் நடைபெறும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை கண்டித்து கருப்பு சட்டை அணிந்த இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் கலந்து கொண்டனர்.

இதில் பெண்ணுரிமை காப்போம், பெண்களுக்கு எதிரான அத்துமீறல்களை கண்டித்தும் கண்டன கோஷங்கள் எழுப்பினர். தென்னிந்திய திருச்சபைகளின் பிஷப் திமோத்தி ரவீந்தர் அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இதில், பொருளாளர்
டி.எஸ்.அமிர்தம், செயலாளர் பிரின்ஸ் கால்வின், துணை தலைவர் டேவிட் பர்ணபாஸ், வாலிபர் அமைப்பு நிர்வாகிகள் டாக்டர் ப்ரீத்தி கரோலின்,
ஜேகோ சாமுவேல், ஐடா கால்வின், ரெவரன்ட் சற்குணம், ரெவரன்ட் ராஜா உட்பட தென்னிந்திய திருச்சபைகள் கோவை மண்டல நிர்வாகிகள், உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img