கோவை காந்திபுரம் – சோமனூர் வழித் தடத்தில் ஓடும் தனியார் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து ஷர்மிளா ஓட்டுநர் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
தமிழகத்தில் தனியார் பேருந்தை ஓட்டும் முதல் பெண் ஓட்டுநர் என்று பலரிடம் பாராட்டு பெற்றவர் ஷர்மிளா (வயது 24). இந்த நிலையில் தி.மு.க எம்.பி., கனிமொழி, இன்று காலை பேருந்தில் ஏறி பயணித்ததுடன், பெண் ஓட்டுநர் ஷர்மிளாவை பாராட்டினார்.
இது குறித்து ஷர்மிளா கூறுகையில்:-
‘கனிமொழி என்னை வந்து பாராட்டினார். அவர் டிக்கெட் எடுத்து தான் பேருந்தில் பயணித்தார். கண்டக்டர் பயணிகளிடம் மரியாதைக் குறைவாக பேசினார். அவரிடம் மரியாதையாக பேசுமாறு அறிவுறுத்தினேன். பிறகு, பேருந்து உரிமையாளர் என்னிடம், நீபிரபலமாகுவதற்காக இதெல்லாம் செய்வாயா எனக் கூறி பணியில் இருந்து விலகுமாறு கூறினார்’ என்றார்.
இதற்கிடையில், ஓட்டுநர் ஷர்மிளாவை பணியை விட்டு விலக நான் சொல்லவில்லை” – தனியார் பேருந்து உரிமையாளர் துரைக்கண்ணு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.