அனைவரின் மனதில் இடம் பிடித்த புரோசோன் மால் ஆறாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. இந்த மகிழ்ச்சியை தள்ளுபடிகள், பரவசமூட்டும் பல சலுகைகளுடன், பொழுது போக்கு அம்சங்களுடன் பொது மக்களுடன் இணைந்து கொண்டாடியது.
விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பிரபல யூடி யூபர்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தனர். மாலையில் மனம் கவரும் கவர்ச்சிகரமான ஆடை அலங்கார அணிவகுப்பு அதோடு, மின்சாரம் பாய்ச்சும் மிக்ஸ் டேப் வழங்கும் ஜூம்பா டான்ஸ் ஆகியவையும் நடைபெற்றன.
மெஸ்மரைசிங் பெலிடி டான்ஸ் நடைபெற்றது.
இஎம்ஐ சானல் வழங்கும் திகைப்புட்டும் நட்சத் திரங்கள் பங்கேற்ற சிறப்பான பொழுதுபோக்கு நிகழ்ச் சிகள் நடைபெற்றன. மூன்று நாட்களும் மகிழ்ச்சி, கொண்டாட்டங்களுடன் வாடிக்கையாளர்கள் குதூகலமடைந்தனர்.
எண்ணற்ற தள்ளுபடி சலுகைகளையும் பெற்றனர். எங்களுக்கு ஆதரவளித்து வரும் கோவை நகருக்கு அன்பையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறோம் புரோசோன் மால் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.