fbpx
Homeபிற செய்திகள்‘சாதிக்க தேவை சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு’ மாணவர்களுக்கு விங் காமாண்டர் அறிவுரை

‘சாதிக்க தேவை சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு’ மாணவர்களுக்கு விங் காமாண்டர் அறிவுரை

சுயஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் இருந்தால் அதிகம் சாதிக்க முடியும் என்று விங் காமாண்டர் மாயா நாயர் பேசினார். தி கேம்ப்போர்ட் இன்டர்நேஷனல் பள்ளி 14-வது முதலீட்டு விழாவை நடத்தியது. இதில் புதிய நிர்வாகப் பொறுப்பை மாணவர்கள் ஏற்றனர்.

கடமை தவறாது பணியாற்றுவதாக உறுதிமொழியையும் பதவிப் பிர மாணத்தையும் மாணவர்கள் ஏற் றனர். மாணவர் தலைவராக கோகுல் கிருஷ்ணன், மாணவிகள் தலைவியாக கே.ஆர்.கிருத்திகா, ஸ்போர்ட்ஸ் கேப்டனாக ஏ.திவ்யஸ்ரீ ஆகியோர் பொறுப்பேற்றனர். விழாவில், விங் காமாண்டர் மாயா கே.நாயர் பேசியதாவது:

சுயஒழுக்கம், வலிமையை கட்டுப் படுத்திக் கொள்ளும் ஆற்றல் தருகிறது. வெற்றிக்கு பயனுள்ள முக்கியமான திறன் இது. தன் செயல் களுக்கும் எதிர்வினைகளுக்கும் பொறுப்பேற்கும் திறன் பெற உதவும். தோல்வி மற்றும் பின்னடைவுகளுக்கு கைவிடாத திறன்களைத் தரும்.

கவனச்சிதறல்களை தடுக்கும், சாதிக்கும் வரை ஊக்குவிக்கவும் இத்திறன் முக்கிய பங்காற்றும். சுய ஒழுக்கம் மட்டும் இலக்குகளை அடைய வழி தரும். பிறருடன் ஒப்பிடும்போது, சுயஒழுக்கமும், சுய கட்டுப்பாடும் வாழ்க்கையில் அதிகம் கடைபிடித்தால் சாதிக்க முடியும்.

சமூகத்தின் சக்தியை முழுமையாக பயன்படுத்துவதற்கான விழிப்புணர் வுக்கான கருவி சமூக ஊடகங்கள். சமூக வலைத் தளங்களின் மூலம் தகவல் களை பரிமாறவும், பகிரவும் முடிகிறது. இது சில நேரங்களில் ஆபத்துகளையும் விளைவிக்கும். தகவல்களை அதிகமாகப் பகிர்வதும் ஆபத்துதான்.

தீங்கு விளைவிக்கும் பல காரணங்கள் உள்ளன. கவனமாக வலைத்தளங்களை கையாள வேண்டும் என்றார். பள்ளித் தலைவர் என்.அருள் ரமேஷ், தாளாளர் பூங்கொடி அருள் ரமேஷ், முதல்வர் பூனம் சியால் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

படிக்க வேண்டும்

spot_img