fbpx
Homeபிற செய்திகள்டாக்டர் என்ஜிபி கலைக் கல்லூரியில் டிபிடி நட்சத்திரக் கல்லூரி திட்ட விழா

டாக்டர் என்ஜிபி கலைக் கல்லூரியில் டிபிடி நட்சத்திரக் கல்லூரி திட்ட விழா

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உயிர்வேதியியல் உயிர் தொழில் நுட்பம், நுண்ணுயிரியல், உணவு மற்றும் ஊட்டச்சத்துணவியல் போன்ற துறைகளுக்கு கலை மற் றும் அறிவியல் கல்லூரிகளுக்கு வழங்கப்படும் DBT நட்சத்திரக் கல்லூரித் திட்டத்தின்கீழ் 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை நிதியளிக்கப்பட்டது.

அந்தத் துறைகள் 2023-ம் கல்வியாண்டில் DBT நட்சத்திரத் தகுதியுடன் இணைக்கப்பட்டது. கூடுதலாக DBT STAR கல்லூரித் திட்டம் 2023-ம் ஆண்டில் கணினி அறிவியல், கணிதம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கும் ‌விரிவுபடுத்தி வழங்கப்பட்டது.

புதுதில்லியைச் சார்ந்த இந்திய அரசு, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் திட்டத்தலைவர் டாக்டர் கரிமாகுப்தா, மாநாட்டைத் துவக்கி வைத்து, கல்லூரிகளின் ஆய்வகங்களுக்குத் தேவையான அறிவியல் கருவிகள் மற்றும் ரசாயனங்கள் போன்றவற்றை வாங்குவதற்கு நிதியுதவியுடன் ஆய்வ கங்களை மேம்படுத்துவதற்கான நட்சத்திரக் கல்லூரித் திட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி வலியுறுத்தினார்.

DBT நட்சத்திரக் கல்லூரித் திட்ட ஒருங்கிணைப்பாளர் டாக்டர் எஸ்.எஸ்.சுதா வரவேற்றார். டாக்டர் என்.ஜி.பி.கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் மருத்துவர் தவமணிதேவி பழனிசாமி, டாக்டர் என்.ஜி.பி. கல்விக் குழுமங்களின் கல்விசார் இயக்குநர் பெ.இரா. முத்துசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.

முதன்மை விருந்தினரான DBT நட்சத்திரக் கல்லூரியின் வெளிப் புற வல்லுநர் முனைவர் ஆர். ராஜேந்திரன் பேசும்போது, அறிவியல் இல்லாமல் உலகம் இல்லை. ஒருநாடு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சியில் முதலீடு செய்யும்போது அந்தநாடு உயரத்தை எட்டும் என்றார்.

டாக்டர் கரிமாகுப்தா DBT நட்சத்திரக் கல்லூரித் திட்டம் பற்றிய கருத்துகளைப் பகிர்ந்தார். கல்லூரி முதல்வர் (பொறுப்பு) முனைவர் எஸ்.சரவணன் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img