சவீதா மருத்துவம் மற்றும் தொழில் நுட்ப அறிவியல் நிறுவனத்தின் சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரியில் உயிர்-சுற்றுச்சூழல் அறிவியல் பாடப் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, நீரில் உள்ள வண்டல்களை சுத்திகரிப்பது தொடர்பான பயிற்சிக்காக, இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் எக்ஸ் னோரா அறக்கட்டளை சார்பில், இது சார்ந்த நடவடிக்கைகளை பார்த்து அறிந்து கொள்வதற்காக அழைத்துச் செல்லப் பட்டனர்.
இந்த நீர் சுத்திகரிப்பு மையம் சென்னை, ரெட்ஹில்ஸ் பகுதியில் உத்தண்டியில் அமைந்துள்ளது. அனுபவம் வாய்ந்த வழிகாட்டிகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்கள் தலைமையில், மாணவர்கள் நீர் வண்டல் சம்பந்தப்பட்ட பல்வேறு சிக்கலான நடை முறைகள் குறித்து அறிந்து கொண்டனர்.
தூய்மையான நீரை நாம் குடிப்பதற்கும் பயன்படுத்துவதற்கும், இந்த வண்டல் படிவ சுத்திகரிப்பு என்பது மிக முக்கியமான ஒன்றாகும். மாணவர்கள், வண்டல் தொட்டிகள் மற்றும் செட்டில்லிங் பேசின்களின் பயன்பாடு உள்ளிட்ட பல் வேறு நடைமுறைகள் குறித்தும் அறிந்து கொண்டனர்.
இந்த கட்டமைப்புகள் நீரிலிருந்து இடைநிறுத்தப்பட்ட துகள்கள் மற்றும் வண்டல்களைப் பிரிப்பதற்கு எவ்வாறு உதவுகின்றன என்பது குறித்து கூறப்பட்டது. இது தூய்மையான மற்றும் தெளிவான நீரை பிரித்தெடுக்க எவ்வாறு உதவுகிறது என்பது குறித்தும் கூறப்பட்டது.
எக்ஸ்னோரா அறக்கட்டளை, நிலையான நீர் மேலாண்மை நடை முறைகளின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தியதோடு, நீர் ஆதாரங்களின் பொறுப்பான பயன்பாடு மற்றும் தண்ணீரை பாதுகாப்பாக பயன்படுத்துவது குறித்தும் கூறியது.
நீர் மாசுபாட்டின் காரணமாக ஏற்படும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் நமது பூமியின் மிகவும் விலைமதிப்பற்ற வளத்தைப் பாதுகாக்க சுற்றுச்சூழலை நாம் எவ்வாறு பேணிக் காக்க வேண்டும் என்பது குறித்தும் தெளிவுபடுத்தப்பட்டது.
சிமாட்ஸ் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் என்.எம். வீரையன், சிமாட்ஸ் என்ஜினியரிங் கல்லூரி இயக்குநர் டாக்டர் ரம்யா தீபக் ஆகியோர் மாணவர்கள் இடையே சுற்றுச்சூழல் அறிவியலில் ஆர்வத்தை ஏற்படுத்துவதற்கும், நமது கிரகத்தின் நல்வாழ்வுக்கு பொறுப்புமிக் கவர்களாக அவர்கள் மாறுவதற்கும் இதுபோன்று பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப் பிடத்தக்கது.